• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

23ம் தேதி நடைபெறும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கான வீரவணக்க நினைவஞ்சலிக்கு 500க்கும் மேற்பட்ட வாகனங்களில்  செல்ல தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி முடிவு!!

policeseithitv by policeseithitv
July 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
23ம் தேதி நடைபெறும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கான வீரவணக்க நினைவஞ்சலிக்கு     500க்கும் மேற்பட்ட வாகனங்களில்   செல்ல தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி முடிவு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, ஜூலை 13

நெல்லையில் வரும் 23ம் தேதி நடைபெறும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கான வீரவணக்க நினைவஞ்சலிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது என்று தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமை வகித்தார்.

மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பிரமணியன், பாலசுந்தரராஜ், மாநில துணை அமைப்பு செயலாளர்கள் கிருபைராஜ், லிங்கராஜ், மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கரு.இராஜசேகரன், மன்சூர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் மருதன்வாழ்வு ரவி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அய்யர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் பேசியதாவது, வரும் 23ம் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் கூலி உயர்வுக்காக போராடி உயிர் நீத்த 17மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் உயிர் தியாகத்திற்கு மாபெரும் வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்தாண்டிற்கான வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் தச்சநல்லூரில் நமது புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் மாபெரும் வீரணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

வீரவணக்க நினைவஞ்சலி மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50வாகனம் என குறைந்தது 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று நெல்லை கே.டி.சி நகரில் இருந்து அணி திரண்டு சென்று பங்கேற்றிடவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தந்து இந்நிகழ்வினை சிறப்பித்திடவேண்டும் என்றார்.

கூட்டத்தின்முடிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க நினைவஞ்சலி மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாநில தொண்டரணி அமைப்புக்குழு அசோக்குமார், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் பெருமாள், அதிக்குமார்குடும்பர், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர்பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி.முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளாத்திக்குளம் பெருமாள்(தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முகநாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், நன்றி கூறினார்.

======================

Previous Post

வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி மற்றும் வேதாரணியம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி 

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 5 கோடியே56 இலட்சத்து86ஆயிரம் மதிப்பீட்டில்நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைமாண்புமிகுஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆய்வு

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 5 கோடியே56 இலட்சத்து86ஆயிரம் மதிப்பீட்டில்நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைமாண்புமிகுஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 5 கோடியே56 இலட்சத்து86ஆயிரம் மதிப்பீட்டில்நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைமாண்புமிகுஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In