வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி மற்றும் வேதாரணியம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி
வேதாரணியம் ஜூலை 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி மற்றும் வேதாரணியம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி இன்று காலை வேதாரணியம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்தடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியை வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ புகழேந்தி துவக்கி வைத்தார்.பேரணி துவங்கும் முன்பு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் வேதாரணியம் நகராட்சி என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்தோடு நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் நகர்மன்றத் துணைத் தலைவர் மங்களநாயகி நகர்மன்ற ஆணையர் ஹேமலதா
நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம்
நகர்மன்ற உறுப்பினர்கள் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

