வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் பக்ரீத் பண்டிகையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை.
வேதாரணியம் ஜூலை 10
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இறை அருளால் கிடைக்கப் பெற்ற உணவை இறைவனுக்கு அர்ப்பணித்து பின்னர் அந்த உணவை மூன்று பகுதிகளாக்கி ஒரு பகுதியை தேவையுள்ள எளிய மனிதர்களுக்கும் மறுபகுதியை தம் நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கும் பகிர்ந்து அளித்து மூன்றாம் பகுதியை தன் தேவைக்கு வைத்துக்கொள்ளுகின்ற பகிர்ந்து அளிக்கும் உணர்வை அன்பை சகோதரத்துவத்தை உணர்த்துகின்ற இந்த தியாக திருநாளை உணர்த்தும் நாள் பக்ரீத் பண்டிகை ஆகும்.

மேலும் தோப்புத்துறை பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா.

