• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெய்தல் கலை விழா தொடக்க நிகழ்ச்சியை மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பாக செயல்படுத்திய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு  கனிமொழி எம்பி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

policeseithitv by policeseithitv
July 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கனிமொழி எம்.பி. யின் தாய் உள்ளம்!! பொதுமக்கள் சார்பில் குவிந்த பாராட்டுக்கள்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெய்தல் கலை விழா தொடக்க நிகழ்ச்சியை மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பாக செயல்படுத்திய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு

கனிமொழி எம்பி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

 

தூத்துக்குடி

ஜூலை, 10

 

தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை, பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

 

7 ம் தேதி நெய்தல் விழா நடைபெறுவதற்கு

முன்பு கடந்த 6ம் தேதி தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட

கோமஸ்புரம் ராஜீவ் காந்தி வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்தில் ஓவியம் வரைந்து நிகழ்ச்சி துவக்கப்பட்டது. இந்த முதல் நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் முழுமையான ஏற்பாடுகள் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து முன்னேற்பாடுகளையும் சரவணகுமார் முன்னின்று செய்ததை எம்பி கனிமொழி கருணாநிதி அன்றைய தினமே பாராட்டினார்.

இந்த நிலையில் 4 நாட்கள் வஉசி மைதானத்தில்

நடைபெற்ற நிகழ்ச்சியில்

மாலை சக்கை குச்சி ஆட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, கலை மாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு, துடுப்பாட்டம், சிலம்பாட்டம்,பறையாட்டம், கலை நிகழ்ச்சிகள், திரைப்பட புகழ் செந்தில்-ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிராயன் கூத்து நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன நேற்று 3 நாள் நிகழ்ச்சியாக நெய்தல் கலை விழா நிகழ்ச்சி

இரவு 2 மணி வரை விடிய விடிய நடைபெற்றது

நிகழ்ச்சிகளை காண பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட புகழ் ராஜலட்சுமி-செந்தில் பங்கேற்ற நிகழ்ச்சி இளைஞர்களையும் மாணவர்களையும் பொதுமக்களையும் உற்சாகப்படுத்தியது.

 

கலை விழாவில் கனிமொழி எம்.பி.யுடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்,ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இன்று 4-வது நாள் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெறுகிறது. இறுதி நாளான இன்று தூத்துக்குடி ராஜேந்திரன் குழுவினரின் சிலம்பாட்டம், சக்கரத்தாழ்வார் குயில் ஆட்டம், முத்துப் பெருமாள் குழுவினரின் கணியான் கூத்து, காயல்பட்டினம் தூக்கி குழுவினரின் இசை நிகழ்ச்சி, முருகசாமி குழுவினரின் பம்பை-கைசிலம்பம், மற்றும் கழியல் நிகழ்ச்சி, பறையாட்டம், இசை நிகழ்ச்சிகள் உட்பட மண்சார்ந்த கலைஞர்களின் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் கிராமிய மணம் கமழ நடைபெறுகிறது. இதற்கு முன்பாக கனிமொழி கருணாநிதி அவர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தி வரும் இந்த நெய்தல் கலை விழா நிகழ்ச்சிக்கு அவருடன் விழா சிறப்புற அமைய

பெரும் பங்காற்றிய ஸ்பான்சர் மற்றும் நெய்தல் விழாவிற்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக கவனித்து வந்த

ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உட்பட முக்கிய நபர்களுக்கும் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிக்கு எம் பி கனிமொழி அவர்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பொன்னாடை போத்தி நன்றி தெரிவித்தார் எம் பி கனிமொழி கருணாநிதி. அதன்படி இன்று நெய்தல் கலை விழா நிறைவு நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருக்கு கனிமொழி எம்பி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

 

செய்தி தொகுப்பு

எம் ஆத்திமுத்து

Previous Post

கனிமொழி எம்.பி. யின் தாய் உள்ளம்!! பொதுமக்கள் சார்பில் குவிந்த பாராட்டுக்கள்!!

Next Post

வேதாரண்யம் அருகே  தென்னம் புலத்தில்  வாகனம் கவிழ்ந்து விபத்து 

Next Post
கனிமொழி எம்.பி. யின் தாய் உள்ளம்!! பொதுமக்கள் சார்பில் குவிந்த பாராட்டுக்கள்!!

வேதாரண்யம் அருகே  தென்னம் புலத்தில்  வாகனம் கவிழ்ந்து விபத்து 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In