*தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக திரு. லயோலா இக்னேஷியஸ் அவர்கள் இன்று (07.07.2022) பொறுப்பேற்றுக் கொண்டார்.*
*முன்னதாக இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவில் 3 வருடமும், அதற்கு முன்னதாக சென்னை பெருநகர காவல்துறையில் 5 வருடமும் பணியாற்றியுள்ளார்.*
*மேலும் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டு ஆண்டுகள் காவல் ஆய்வாளராகவும், விளாத்திகுளம் மற்றும் திருச்செந்தூரில் காவல் துணை கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.*

