நாகையில் ஆசாத் மார்க்கெட் கட்டுமான பணிக்கான பூமி பூஜை
நாகை ஜூலை 6
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் மார்கெட் பூமிபூஜை விழா மாண்புமிகு சுற்றுச்சுழல் காலநிலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகதலைவர் கௌதமன், நாகை எம்.எல்.ஏ முகமது ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22 பணியின் மூலம் வார்டு எண். 25ல் ரூ.223 இலட்சம் மதிப்பீட்டில் ஆசாத் மார்கெட் கட்டும் பணி நடைபெறவுள்ளது. இதில் 16 எண்ணிக்கையில் அ பிரிவு கடைகளும், 12 எண்ணிக்கையில் பி டைப் கடைகளும், 14 எண்ணிக்கையில் ஆடு இறைச்சி கடைகளும், 14 எண்ணிக்கையில் மீன் கடைகளும் என மொத்தம் 56 கடைகளும் மற்றும் இரண்டு ஆண்கள் கழிவறையும், இரண்டு பெண்கள் கழிவறையும் அமைக்கப்படவுள்ளது மற்றும் உள்ளே வெளியே போக 15 அடி அகலத்தில் நான்கு புறநுழைவு வாயில் ஆகிய அனைத்து வசதிகளுடன் ஆசாத் மார்கெட் அமைய உள்ளது.

இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் மாரிமுத்து, நகரமன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

