நாகை மாவட்டத்தில் தற்காலிக தேர்தல் நடைபெறும் வாக்குசாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
நாகை ஜூலை 6
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியம், ஏனங்குடி, ஆதலையூர் ஆகிய பகுதிகளில் நடைபெம் தற்செயல் தேர்தல்கள் வாக்குசாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப் பட்டிருக்கும் வாக்குசாவடி மையத்தினையும், ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்க பட்டிருக்கும் வாக்குசாவடி மையத்தினையும் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யபட்டுள்ளனவா, குடிநீர், மின்சாரம் கழிவறை வசதிகள், மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யபட்டுள்ளனவா என மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிகழ்வில், வாட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் உதவி செயற்பொறியாளர். செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

