வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள நெய்தல் கலை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.
*♻️தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நாளை (07.07.2022) முதல் 10.07.2022 அன்று வரை 4 நாட்கள் நெய்தல் கலை விழா எனும் கைவினை கலைஞர்களின் கண்காட்சிகள், பராம்பரிய உணவு திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.*
*♻️மேற்படி நாளை தொடங்கவுள்ள நெய்தல் கலை விழா நிகச்சிகான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (06.07.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ள வ.உ.சி கல்லூரி மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.*
*♻️இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பிரேமானந்தன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உட்பட காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.*

