வேதாரண்யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் .
வேதாரண்யம் ஜூலை 5
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வேலைத் திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்திட தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி வேலை நாட்களை தமிழக அரசு 150 நாட்களாகவும், தினக்கூலியை ரூபாய் 381 ஆக உயர்த்திட
தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்திட வலியுறுத்தி மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். முதலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் தங்களது கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேதாரண்யத்தில் முக்கிய வீதி வழியாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தடைந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு V. இளையபெருமாள் தலைமை தாங்கிட
எஸ். அம்பிகாபதி ,டி. கல்யாணசுந்தரம்,எம் .பாலசுப்பிரமணியன் முன்னிலை வகுத்திட
கே. சித்தார்த்தன் ,வி. அம்பிகாபதி,A. வெற்றியழகன் ஆகியோர் விளக்க உரை ஆற்றிட மற்றும் பல அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இறுதியில் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்திட கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

