நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் பரவாமல் தடுக்க நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் ஜூலை 4 நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமணையை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தெரிவித்தாதவது,
காரைக்கால் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் அதிகமாக ஏற்படுவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் குறைந்தபட்சம் 20 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே அருந்துங்கள். வெளியிடங்களில் குடிநீர் அருந்தும் போது கவனமாக இருக்கவும். பாதிக்கப்பட்ட நபருடன் இருக்க நேர்ந்தால், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவும். உணவுப் பொருட்களை நன்கு கழுவிய பிறகும் நன்கு சமைத்த பிறகும் பயன்படுத்தவும்.
பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்கவும். வாந்தியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையை அணுகவும். அரிசிக் கஞ்சி, நீர், மோர், இளநீர், நீராகாரம் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம் உங்கள் வீட்டிலோ, அருகிலோ மூத்த குடிமக்கள் யாராவது இருப்பின் அவர்களுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுங்கள். அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஃஅரசு மருத்துவமனையை அணுகவும். குடிநீர் குழாயிலோ அல்லது கழிவு நீர் குழாயிலோ ஏதேனும் கசிவோ அல்லது உடைப்போ ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துறையிடம் உடனே தெரிவிக்கவும். காரைக்காலில் பரவியுள்ள காலார நோய் கண்டு தமிழக எல்லையோரம் வாழும் மக்கள் பீதியடைய தேவையில்லை நாகை மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு காலார நோய் கட்டுப்படுத்த போதுமான மருந்துகள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு கையிருப்பில் தயாராக வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்தார்.


நாகப்பட்டினம் அரசு மருத்துவமணையில் படுக்கை வசதிகள், கழிவறை வசதிகள், சிடி ஸ்கேன், தீவிர சிகிச்கை மையம், போன்றவற்றை ஆய்வு செய்து சுத்தமாகவும் சுகாதாரமகாவும் மருத்துவமணையினை பராமரிக்க மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
இவ் ஆய்வின் போது நிலைய மருத்துவர் உமாமகேஸ்வரன் உடன் இருந்தார்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

