நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் 04.07.2022 நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜூலை 4 வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்விஉதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 269 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவரின் கணவர் பார்த்திபன் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக முதலமைச்சர் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ.1,00,000-த்திற்கான காசோலை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வி.ஷகிலா, சமூகபாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்திமக்கள் தொடர்புஅலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

