நாகை மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்
நாகை ஜூன்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படிநாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மக்கள் கொரேனா நோய் தொற்று பரவலில் இருந்து காத்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட மூன்று முக்கிய அம்சங்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தொற்றானது, பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசத்தை சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரியநேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கோவிட் வழிமுறைகளை முறையாக கடை பிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்


