தூத்துக்குடியில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி!!
800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி,
ஜூலை,4
உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம் நடத்தும் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியை உலக சிலம்பம் விளையாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் சுதாகரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்போட்டியில், ஒற்றை கம்பு, இரட்டை கம்பு தொடு முறை ஆகிய போட்டிகளில் சிறுவர், சிறுமியர்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் வெற்றி பெற்ற மாணவ, மனைவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


