• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை – உதயநிதி ஸ்டாலினிடம் பி.டி.அரசகுமார் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 29, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை – உதயநிதி ஸ்டாலினிடம் பி.டி.அரசகுமார் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை. ஜுன் 29.
கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் பி.டி.அரசகுமார் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கப்படுகிறது. இதனை திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மூத்த கழக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பொற்கிழி வழங்கி வருகிறார்.
இளைஞரணி சார்பில் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு சுமார் ரூ.10 கோடி நன்கொடைகள் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் வட்டி தொகையை வைத்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர்.


அதன் அடிப்படையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக சென்ற உதயநிதி ஸ்டாலின் 1051 கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார். இந்த நிகழ்;ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்: ‘எனக்கு பேச்சை விட செயல்தான் பிடிக்கும். அதனால் குறைந்த அளவே பேசுவேன். நீங்கள் தான் இந்த கழகத்தின் உயிர். நீங்கள் இல்லையென்றால் கழகம் இல்லை. முழு வெற்றிக்கும் கழக மூத்தோடிகளின் பங்கு அதிகம் என்பதில் பெருமை படுகிறேன். நான் பெரியார், அண்ணாவை பார்த்ததில்லை. உங்கள் ஒவ்வொருவரையும் பெரியார், அண்ணாவாக பார்க்கிறேன்’ என்று பேசினார்.
புதுக்கோட்டை திருமண விழாவிற்கு வருகை புரிந்த திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளர் பி.டி.அரசகுமார் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் உதயநிதி ஸ்டாலினிடம் கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பி.டி.அரசகுமார் வழங்கினார். இந்நிகழ்வில் கவிச்சுடர் கவிதை பித்தன் உட்பட முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Previous Post

பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’-பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2-வது கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்  பேச்சு 

Next Post

கில்லி போல் சொல்லி அடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாப்பிள்ளையூரணி திமுகவினர் உற்சாகம்

Next Post
கில்லி போல் சொல்லி அடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாப்பிள்ளையூரணி திமுகவினர் உற்சாகம்

கில்லி போல் சொல்லி அடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாப்பிள்ளையூரணி திமுகவினர் உற்சாகம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In