• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கில்லி போல் சொல்லி அடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாப்பிள்ளையூரணி திமுகவினர் உற்சாகம்

policeseithitv by policeseithitv
June 30, 2022
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கில்லி போல் சொல்லி அடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாப்பிள்ளையூரணி திமுகவினர் உற்சாகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கில்லி போல் சொல்லி அடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மாப்பிள்ளையூரணி திமுகவினர் உற்சாகம்
தூத்துக்குடி.ஜுன் 30.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வந்த அனிதா ராதாகிருஷ்ணன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு தேர்தல் நாயகன் என்ற பட்டப்பெயரும் உண்டு. சாத்தான்குளம் இடைத்தேர்தலில் ஆரம்பித்து இன்றுவரை தேர்தல் களம் என்றால் இரவுபகல் என்று பாராமல் பணியாற்றுவார் அனிதா ராதாகிருஷ்ணன். இவரின் தேர்தல் பொறுப்பை ஒப்படைத்தால் அதில் தனிமுத்திரையை பதிப்பார் என்பது தலைமைக் கழக மூத்த நிர்வாகிகள் அனைவரும் அறிந்தது. அந்த அளவிற்கு அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர்.
இந்த நிலையில், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக, அதிமுக, பாஜக, அமமுக உட்பட 9 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராகவும், ஒன்றிய துணைத்தலைவராகவும் இருந்த கோயில்மணி காலமானார். அதனால் காலியான 3வது வார்டுக்கு ஜூலை 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் முறையே கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டது. அவர்கள் வேட்பு மனு செய்திருக்கிறார்கள்.
திமுக சார்பில் போட்டியிடும் மாப்பிள்ளையூரணியை சேர்ந்த தொம்மை சேவியர், புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நாகராஜுடம் சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.


அதுபோல் அதிமுக சார்பில் தொம்மை ராஜ் மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் பல்வேறு கட்சி உட்பட 9 பேர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அதிமுக வேட்புமனு உட்பட 4 வேட்புமனுக்கள் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யாமல் இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் 5 பேர் களத்தில் நின்ற நிலையில், அதில் அமமுக, பாஜக, சுயேட்சை உட்பட 4 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர்.
இதனால், தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 3வது வார்டு தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் தொம்மை சேவியர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் நாயகன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆணைக்கிணங்க ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணகுமார் ஆகியோரின் தேர்தல் வியூகம் மாப்பிள்ளையூரணி திமுகவினர்களை உற்சாகம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அமமுக வேட்பாளர் ஆரோக்கியம் தனது மனுவை வாபஸ் பெற்றதோடு, திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இணைந்தார்.
போட்டியின்றி வெற்றிபெற்ற 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் இன்று மாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்நிகழ்ச்சியின் போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணகுமார், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி, துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ஜெயக்கொடி, சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி சப்பானிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, தங்க மாரிமுத்து, பெலிக்ஸ், பாலம்மாள், சக்திவேல், கதிர்வேல், வக்கீல் கிருபாகரன் உள்பட கிளைச்செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி தொகுப்பு: எம்.ஆத்திமுத்து, போலீஸ் செய்தி.

 

Previous Post

கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை – உதயநிதி ஸ்டாலினிடம் பி.டி.அரசகுமார் வழங்கினார்.

Next Post

புதுக்கோட்டை 5-ஆவது புத்தகத் திருவிழா பிரச்சார பதாகையை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வெளிட்டார்..

Next Post
புதுக்கோட்டை 5-ஆவது புத்தகத் திருவிழா பிரச்சார பதாகையை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வெளிட்டார்..

புதுக்கோட்டை 5-ஆவது புத்தகத் திருவிழா பிரச்சார பதாகையை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வெளிட்டார்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In