• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கம்!! 

policeseithitv by policeseithitv
June 29, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கம்!! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கம்!!

 

தூத்துக்குடி ஜூன் 29

 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினார்கள். அப்போது மேயர் பேசுகையில் அனைத்து பகுதிகளும் முழுமையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரைவில் பணிகள் முடிவு பெறவுள்ளன. அதே போல் மாநகரில் பள்ளி செல்லும் குழந்தைகள் பகுதிகளில் புதிய தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. அனைவருடைய பகுதிகளிலும் அனைத்து பணிகளும் முழுமையாக நடைபெறுவதற்கு ஓத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு கவுன்சிலர் மூலம் குடிதண்ணீர் வரும் நேரம் தெரிவிக்கப்படுகிறது. வரும் 1ம் தேதி முதல் அதே போல் குப்பை எடுப்பதற்கான வாகனம் எந்த பகுதிக்கு எப்போது வரும் என்ற தகவல் கவுன்சிலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதற்கு பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் சொல்லவேண்டும். புறநகர் பகுதியின் வளர்ச்சிக்கும் முழுமையான பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கும் 2023க்குள் ஸ்மார்ட் திட்டப்பணிகள் அனைத்தும் முழுமை பெறும் வகையில் உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் அதற்கு முன்னதாகவே அனைத்து அடிப்படை பணிகளும் நிறைவேறும் இதற்காக மாநகராட்சி அதிகாரிகளும் பணி செய்து வருகிறார்கள் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டுகள் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு சென்றால் எனது பெயரையும் கவுன்சிலர் பெயரையும் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். தேவையற்ற விளம்பர பதாகைகள் அரசு சுவர்களில் ஓட்டுவதையும் தவிர்ப்பதற்கு நீங்கள் ஓத்துழைக்க வேண்டும். நானும் மாநகரின் வளர்ச்சிக்கு இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். என்னோடு நீங்களும் இனைந்து வாருங்கள் மாநகராட்சி வளர்ச்சிக்காக என்று பேசினார். மேயர் கொண்டு வந்த தீர்மானம் உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகராட்சி பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சரவணக்குமார், விஜயகுமார், ராமர், கண்ணன், ஜாக்குலின்ஜெயா, வைதேகி, தனலட்சுமி, பவானி மார்ஷல், மெட்டில்டா, சரண்யா, தெய்வேந்திரன், கந்தசாமி, சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, ரெங்கசாமி, மும்தாஜ், முத்துமாரி, ஜான், ஜாண்;சிராணி, ராமும்மாள், ரிக்டா, பேபிஏஞ்சலின், சந்திரபோஸ், கற்பககனி, நாகேஸ்வரி, ஜெயசீலி, எடின்டா, பொன்னப்பன், சரண்யா, சோமசுந்தரி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட  15 ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!! 

Next Post

பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’-பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2-வது கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்  பேச்சு 

Next Post
பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’-பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2-வது கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்  பேச்சு 

பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்'-பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2-வது கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்  பேச்சு 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In