நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று 27.06.2022 நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 160மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட செய்தியாளர் பி. மூர்த்தி புற்றுநோய் சிகிச்சைக்கான நிதியுதவியாக ரூ.30,000-க்கான காசோலையினையும், அன்னைசத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு கல்வி உதவித் தொகையாக ரூ.15,000-க்கான காசோலையினையும், நம்பியார் நகரைச் சேர்ந்த ஆர்.சங்கர் இடது கண்ணில் ஏற்பட்ட விபத்து சிகிச்கைக்காக ரூ.15,000-க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன் விருப்ப நிதியிலிருந்து வழங்கினார். மேலும், திருநங்கைளுக்கான மூன்று நபர்களுக்கு அடையாள அட்டையினையும், 2 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் இன்று 27.06.2022 வழங்கினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூகபாதுகாப்பு துணைஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்வீஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.


