வேதாரண்யத்தில் சாலையில் வீசிய மலர்மாலையால் விபத்து-
இருவர் படுகாயம்
வேதாரணியம் ஜூன் 27
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஒரு
மூதாட்டி மறைவை ஒட்டி நடந்த இறுதி ஊர்வலத்தில் பிரதான சாலையில்
மலர் மாலைகள் இரைத்து சென்றதால்
வேதாரண்யத்திலிருந்து கருப்பம்புலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வாலிபர்கள் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தனர்.
கருப்பம்புலம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஐயப்பன் (வயது 25) ரஞ்சித் ( வயது 22 ) இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியே சாலையில் இரைக்கப்பட்ட மலர் மாலைகளில் இருசக்கர வாகனம் ஏறி சென்றபோது வழுக்கியதால் வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் வேதாரணியம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் நாகை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி வேதாரண்யம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் . இறுதி ஊர்வலத்தின் போது பிரதான சாலையில் இரைக்கப்பட்ட மலர் மாலைகளால் விபத்து நடந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .


