நாகப்பட்டினத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணிகள்
நாகை ஜூன் 25
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், கொடி மரத்துப் பூங்கா ஆகிய இடங்களில் நடைபெறும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்


