சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
நாகை ஜூன் 25
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியினை நாகப்பட்டினம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி அங்கிருந்து நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி வரை சென்றடைந்து நிறைவு பெற்றது. மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இப்பேரணியில் சுமார் 100 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் உதவி ஆணையர் குணசேகரன் (கலால்), நாகப்பட்டினம் வருவாய் கோட்ட அலுவலர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாண்ன் மற்றும் பிறதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்


