அதிவேக அலைக்கற்றை வழக்குதல் பணிக்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்
நாகை ஜூன் 25
நாகப்பட்டினம் மாவட்டம் ஐவநல்லுர் ஊராட்;சியில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்கண்ணாடி இழை கம்பிவடம் அமைத்து அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊராட்சிகளுக்கும் அதிவேக அலைக்கற்றை வழங்குதல் பணிக்கு பூமிபூஜையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்
பாரத்நெட் செயல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கண்ணாடி இழைவலையமைப்பு நிறுவனத்தின் மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், கிராம ஊராட்சிகளிலும முறையே 10 ஜிபிஎஸ் வேக அளவிலான அலைக்கற்றை வழங்கிடும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களிலும், 12525 ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கம்பிவடம் அமைத்து அதன் முலம் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு என்ற நிறுவனம் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், 6-ஊராட்சி ஒன்றியங்களிலும் 193-ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை வலையமைப்பு மேற்கொள்ளப்படஉள்ளது. கண்ணாடி இழைகம்பி வடம் (அமைக்கும் பணியில், 85-சதவிகிதம் தமிழ்நாடு மின்வாரிய மின்கம்பங்கள் வழியாகவும், 15 சதவிகிதம் பூமிக்கடியிலும் அமைக்கப்பட உள்ளன.
கேபிள் அமைக்கும் பணியில் சாலைகள், மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, இரயில்வேக்ராஸ் வனப்பகுதி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும். மேற்படி கேபிள் பொருந்தப்படும் பணியில் எவ்வித கட்டணமும் உள்ளாட்சி அமைப்பிற்கு செலுத்ததேவையில்லை. கட்டணம் செலுத்துவதிலிருந்து முழூமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையில் கேபிள் அமைக்கும் பணியில் மட்டும் முன்அனுமதி பெறப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சவுந்தரராஜன் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்


