நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கடன் மேளா
நாகை ஜூன் 22
தமிழக முதலமைச்சர் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ ஆகிய துறை சார்பில் வங்கி கடன் மேளா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் முன்னிலை வகித்தார்.


இச்சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து இன்றைய தினம் மெகா வங்கி கடன் மேளா நடத்தப்படுகிறது. இங்கு வந்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இம்முகாமில் வங்கி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளித்துள்ளனர். தகுதியுள்ள விண்ணப்பங்களை பரிசீலிக்கப்பட்டு இன்னும் சில மாதங்களில் தகுதியானவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்படும் இன்றைய தினம் வங்கி கடன் பெற்றவர்கள் மற்றும் வங்கிகடன் பெற போகிறவர்கள் அனைருக்கும் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் மீண்டும் உங்களுக்கு வங்கி கடன் வழங்கப்படும் அனைவரும் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 17 மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியம் ரூ. 3,65,001மும். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 21 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 93,31,150ம், ஆவின் துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.150000 மதிப்பிலான குளிர் சாதன பெட்டிகளும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதிகேற்ப வேலைவாய்ப்பற்றோருக்கான உதவிதொகைக்கான ஆணையினையும் மாவட்டஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலதுறை சார்பில் ரூபன்ஸ்மித், முட நீக்கியல் வல்லுநர் பாரத்குமார், செயல்திறன் உதவியாளர் முருகேஸ்வரி, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் உதவி வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம் மற்றும் பல்வேறு வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்


