நாகையில் தகர கொட்டகையில் இயங்கும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி – தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமா?
வேதாரணியம் ஜூன் 20
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டில் நூறாண்டு சாதனை என போன்றும் வகையில் மக்கள் வாழ்வு மேம்பட நாளுக்கு நாள் பல புதிய திட்டங்களையும், அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கி அசத்தி வருகிறார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்துறை இந்தியளவில் தமிழகம் முதன்மையாக விளங்கும் வகையில் முதல்வரின் நேரடி பார்வையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரின் ஆலோசனை கேட்டு தமிழகம் முழுவதும் கல்வித்துறை சிறந்து விளங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வமாக முன்வந்த இந்த காலகட்டத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தகர கொட்டகையில் மாணவர்கள் கல்வி பயின்று வருவது வேதனை அளிக்கிறது.
இப்பள்ளி பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இங்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் தகரக் கொட்டகையில் இயங்கி வருவது பெற்றோர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1240 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த ஆண்டில் இப்பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி மு.அபிநயா நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயிலும் வாய்ப்பை பெற்று மருத்துவம் பயின்று வருகிறார். இப்படி பல சிறப்புகளை பெற்ற இந்த பள்ளியில் மாணவர்கள் பயில போதுமான கட்டிடவசதிகள் இல்லாததால் அவதிக்கு ள்ளா கின்றனறனர். நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் 11 வகுப்புகள் தகரக் கொட்டகையில் நடைபெறு கின்றன. அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காததால் இந்த ஆண்டு மாணவர்கள் சோ்க்கையை மேற்கொள்ள ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக சமூக ஆர்வலர் சுல்தானூல் ஆரிபின் வழங்கிய நன்கொடை ரூ.15 லட்சம் உள்பட ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. மொத்தம் உள்ள 15 வகுப்பறைகளும் அதிநவீன இணைய சேவை வசதி மற்றும் தொடு திரையுடன் கூடிய டிஜிட்டல் வகுப்பறையாக உள்ளன. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள்தகர கொட்டகையில்செயல்படு கின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானூல் ஆரிபின் ஈடு செய்து வருகிறார். கூடுதலாக 28 வகுப்புகளுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து 3 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகள் இருந்தாலும் ஆய்வகம் மற்றும் முறையான நூலக வசதி இல்லை.
விளையாட்டு அரங்கம், கழிப்பறை வசதியும் குறைவானஅளவில் உள்ளன. கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இப்பள்ளியையும் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தேவையான அடிப்படை வசதிகளை உடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பள்ளியை சுற்றிலும் அமைதியான சூழ்நிலை நிலவினால் மட்டுமே முழு கவனத்துடன் மாணவர்கள் மனஅமைதியுடன் கல்வியில் கவனம் செலுத்த இயலும். ஆகவே, தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் விடியல் ஆட்சியை தந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மாணவர்களின் விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி, பள்ளியை சீர்படுத்தி மேம்படுத்தினால் ஏழை மாணவர்களின் வாழ்விலும் விடியல் ஏற்படும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.


