இபிஎஸ்-ஐ கட்சியை விட்டே தூக்க முடியும் …விதிகள் இருக்கு …
இபிஎஸ் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும்!
புகழேந்தி அதிரடி !
சென்னை ஜூன் 20
இபிஎஸ்-ஐ கட்சியை விட்டே தூக்க முடியும் …விதிகள் இருக்கு … புகழேந்தி அதிரடி !
ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும் எனவும், அப்படி நீக்குவதற்கு கட்சியின் விதிகளின் இடமிருக்கிறது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதிரடியாகக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தூபம் போட அது பற்றி தீயாக எரிந்து வருகின்றது.
இந்நிலையில் இபிஎஸ்-ஸை கட்சியை விட்டு நீக்கம் செய்யும் அளவுக்கு ஓபிஎஸ்-க்கு அதிகாரம் இருப்பதாக கூறுகிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளரான புகழேந்தி.
அதிமுக தொண்டர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை. அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும். அப்படி நீக்குவதற்கு கட்சியின் விதிகளின் இடமிருக்கிறது
ஈபிஎஸ் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். நான்கு வருடத்தில் கொள்ளை அடித்தவர்கள் தான் அவர் பக்கத்தில் இருக்கிறார்கள். ஒன்றிய, மாவட்ட, நகர செயலாளர்கள் யாரும் இதில் முடிவெடுக்க முடியாது. தொண்டன்தான் முடிவெடுக்க முடியும்.
ஓபிஎஸ்சை எடுக்க வேண்டும் என முடிவு செய்தால் இரண்டு பொதுக்குழுதான் நடக்கும். அதிமுகவில் நிலவும் ரவுடியிசத்துக்கு காரணம் ஜெயக்குமார் தான்” என பேசியுள்ளார்.

