தூத்துக்குடியில் ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்.
தூத்துக்குடி ராகுல்காந்தி 53வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்திரம் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு கேக் வெட்டி செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு நிழற்குடைகள் அயன்பாக்ஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாநில துணை தலைவர் சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடின்டா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் வக்கீல் சுப்பிரமணி ஆதித்தன், அருள், மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, பிரபாகரன், மாநகர் மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, மண்டல தலைவிகள் பீரித்தி, சாந்தி மாவட்ட சேவாதளம் தலைவர் ராஜா, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நடேஷ்குமார், ஐ.என்.டி.யு.சி.தொழிற்சங்க தலைவர் ராஜ், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, சாத்தான்குளம் வட்டார தலைவர் பார்த்தசாரதி, உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், ஆழ்வை வட்டார தலைவர் கோதாண்டராமன், கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் சொரிமுத்து பிரதாபன், திருச்செந்தூர் வட்டார தலைவர் சற்குரு, சாத்தை மேற்கு வட்டார தலைவர் சக்திவேல் முருகன், சாத்தை மேற்கு வட்டார தலைவர் லுர்துமணி, ஏரல் நகர தலைவர் தாசன், கவுன்சிலர் பாரத், சந்திரன், காயல்பட்டினம் ஷாஜகான், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜ்குமார், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநகர மாவட்ட தலைவர் ராஜாராம், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், நிர்வாகிகள் ஐசன் செல்வர், கோபால், ராஜன், ஜெயராஜ், மணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்;, காங்கிரஸ் எடிசன், குமாரமுருகேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று காலை முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு காலை உணவு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்.

