வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் நபிகள் நாயகத்தை அவதூறாக ஊடகங்களில் பேசிய நுபுர்சர்மா மற்றும் அதனை சமூக ஊடகங்களில் பரப்பிய நவீன்குமார் ஜிண்டால் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி தோப்புத்துறை ஆறுமுச்சந்திப்பில் தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஜூன் 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில்
நபிகள் நாயகத்தை அவதூறாக ஊடகங்களில் பேசிய நுபுர்சர்மா மற்றும் அதனை சமூக ஊடகங்களில் பரப்பிய நவீன்குமார் ஜிண்டால் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி தோப்புத்துறையில் முஸ்லிம் ஜமாஅத் மன்றம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராஅத். எம் சையது அலி முனிரி
( துணை இமாம், ஜாமியா மஸ்ஜித், தோப்புத்துறை) M.M. அப்துல் சலாம் துணைத்தலைவர் (முஸ்லிம் ஜமாத் மன்றம்) தலைமை ஏற்கவும் எஸ் ஜெயினுதீன் செயலாளர் (முஸ்லீம் ஜமாத் மன்றம்) வரவேற்பு ஆற்றவும் சோட்டா பாய் என்கிற R.A.K. ஹமீத் கான், எம்.கே யுசுப் ஷா,
ஏ. ஆர் .யுசுப்ஷா மற்றும் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலை வகிக்கவும்,கே. எம். சாகுல் ஹமீது பார்கவி சிறப்புரை ஆற்றவும்
எச் பசூல் ஹக் நன்றியுரையாற்றினார்
இறுதியில்
நுபுர்சர்மா,
நவீன்குமார் ஜிண்டால் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

