தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
நாகை ஜூன் 15
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் டாக்டர் அன்பரசி முன்னிலை வகித்தார்.
டாக்டா் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000மும், இரண்டாம் பரிசாக ரூ.3000மும், மூன்றாம் பரிசாக ரூ.2000மும், அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000மும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் 2020ஆம் ஆண்டில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக தெரிவு செய்யப்பெற்ற மாவட்ட நிலஅளவை அலுவலகத்திற்கு கேடயத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி பாராட்டினார்.


நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், உதவியாளர் லியாகத்அலி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

