தூத்துக்குடியில் திமுக நிர்வாகி ஜெகன் நீக்கம்.. சாட்டையை சுழற்றிய பொதுச்செயலாளர் துரைமுருகன்.!
தூத்துக்குடி ஜூன் 15
கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆளும் கட்சியினர் எனக்கூறி கொண்டு அராஜக செயலில் தொடர்ந்து பலர் வருகின்றனர். என்று தலைமைக்குப் புகார்கள் வந்துள்ளது. ஆகையால், கட்சியின் பெயருக்கு கலங்கம் வந்துவிடக்கூடாது என நோக்கத்தில் கட்சி நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆளும் கட்சியினர் எனக்கூறி கொண்டு அராஜக செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், கட்சியின் பெயருக்கு கலங்கம் வந்துவிடக்கூடாது என நோக்கத்தில் கட்சி நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தூத்துக்குடி மாநகரத்தை சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக அமைச்சர் ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு சொந்த தம்பியை சொத்து தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக இவர் கைது செய்யப்பட்டார். மேலும், இவர் மீது பல அடி தடி வழக்குகளிலும் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வளம் வந்தார்.
கடந்த 2021இல் தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தனது நண்பர்களுடன் மது அருந்த அறை ஒதுக்குமாறு அங்கு பணிபுரிந்த காவலாளியிடம் கேட்டுள்ளார். அவர் அரை தரமுடியாது என்று கூறியதால் அவரை கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து காவலாளி கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரம் தலைமைக்கு தெரியவந்ததையடுத்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பு களில் இருந்தும் பில்லா ஜெகன் நீக்கப் படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

