நாகை அரசு மருத்துவக் கல்லூரிய மருத்துவமனையில் ரத்த தானம் அளிப்போர் தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைப்பு
நாகை ஜூன் 14
நாகப்பட்டினம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் உலக குருதி கொடையாளர் தினம் கொண்டப்படுவதை முன்னிட்டு தன்னார்வ குருதி கொடையாளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்து, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகம் ழுழுவதும் உலக குருதி கொடையாளர் தினம் கடைப்பிடிக்கபடுவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மற்றும் ஹோலிடவுன் ரோட்டரி சங்கம் ஜே.சி.ஐ.சீ சிட்டி இணைந்து அரசு செவிலியர்கள் பேரணி மற்றும் இரத்த தானம் முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதையும், இரத்த சேமிப்பு கிடங்கினையும் பார்வையிட்டு, பலமுறை இரத்ததானம் செய்த தன்னார்வர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், கேடயத்தினையும் மாவட்டஆட்சியர் வழங்கிபாராட்டினார்.
முன்னதாக, இரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சகஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க தன்னார்வமாக இரத்ததானம் செய்வேன் என்ற உறுதிமொழியினை மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வர்கள் என அனைவரும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் எடுத்துக்கொணடனர்.


மேலும் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.விஸ்வநாதன், குருதி வங்கி மருத்துவ அலுவலர் மரு.யோகன். துணை இயக்குநர் (காசநோய்), மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் மரு.சங்கீதா, மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் மரு.காதர், மாவட்ட திட்ட மேற்பார்வையாளர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் சக்திவேல்., செவிலியர்கள் தன்னார்வர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

