வேதாரண்யத்தில் வேதாரணியம் உட்கோட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் கந்துவட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேதாரணியம் ஜூன் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கந்து வட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் வேதாரணியம் உட்கோட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா, வேதாரணியம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்கொடி, தலைஞாயிறு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் வேதாரணியம் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதில் கந்து வட்டி சம்பந்தமான பல பிரச்சினைகளை பொதுமக்கள் எழுப்பினர். அதற்கு
மாவட்ட துணை கண்காணிப்பாளர் முருகவேல்
பதிலளித்தார்.

இறுதியில்
கந்து வட்டி சம்பந்தமான எந்த புகார் வந்தாலும் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட துணை கண்காணிப்பாளர் முருகவேல்
உறுதி அளித்தார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

