வேதாரண்யத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஜூன் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேதாரணியம் கிளை பணிமனை வாயில் முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.78 மாதகாலமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும்,
ஊதிய உயர்வு ஒப்பந்தங்களின் படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்,
ஓய்வு பெற்றவர்களுக்கும் குடும்ப மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்,
ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக்கால பண பலன்களை உடனே வழங்க வேண்டும்,
போக்குவரத்து கழக ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.இந்தப் ஆர்ப்பாட்டத்தில் T. குழந்தைவேலு, முத்துக்கண்ணு கௌரவத் தலைவர்கள், கே ஆர் ஞானசேகரன் தலைவர், A.வேதரத்தினம் செயலாளர்,
V. தியாகராஜன் பொருளாளர் ,T. வேலாயுதம் செய்தி தொடர்பாளர் மற்றும் ஏராளமான தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.இறுதியில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

