வேதாரணியம் ஞாயிற்று சந்தை தோப்பு அருள்மிகு தேவி திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவம்
வேதாரணியம் ஜூன் 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஞாயிற்று சந்தை தோப்பு அருள்மிகு தேவி திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவம்
25. 5 .2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து
நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான
தீமிதி உற்சவ காட்சி 13. 6 .2022 அன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு கோட்டை பிடித்தல், படுகளம், திரௌபதி கூந்தல் முடிதல் இரவு ஏழு மணிக்கு தீமிதி உற்சவ காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த தீமிதி உற்சவ காட்சியானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவதாகும்.இந்த தீமிதி உற்சவ காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.இதைத் தொடர்ந்து அம்மன் வீதிஉலா காட்சியும் இரவு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும் பிறகு இரவு 9 மணி அளவில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு வேதாரணியம் காவல்துறையினர் மற்றும் வேதாரணியம் தீயணைப்பு துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.வந்திருந்த அனைவரையும் விழாக்குழுவினர் மற்றும் உபயதாரர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.




செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

