நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜூன் 13
நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தைச் சேர்ந்த திருமதி ராசியம்மாள் என்பவர் பாம்பு கடித்து இறந்தமைக்கு அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000 க்கான காசோலையையும் நாகூரைச் சேர்ந்த திரு. அப்துல்காதர், என்பவர்க்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5,000 க்கான காசோலையையும் திருக்குவளை வட்டம், நீர்மூளை, ஓடாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.சித்ரா, என்பவர்க்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10,000 க்கான காசோலையையும் கீழ்வேளுர் வட்டம், பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஜெயசித்ரா என்பவர்க்கு மாவட்டஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து தையல் இயந்திரத்தையும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் இரண்டு திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுதிட்ட அட்டையினையும் இரண்டு திருநங்கைகளுக்கு அடையாள அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.



இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூகபாதுகாப்பு துணைஆட்சியர் கு.ராஜன், மாவட்டஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) ராமன் செய்திமக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.தனபால் மற்றும் சமூகநலத்துறை அலுவலர் தமுமுன் நிஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

