வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம்
வேதாரணியம் ஜூன் 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடிய காட்டில் உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று காலை தேரோட்டத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என் கௌதமன் தேரை வடம்பிடித்து தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி துணைத் தலைவர்,
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு துணை தலைவர் அறிவழகன்கோடியக்காடு வனத்துறை அலுவலர் அயூப்கான்
மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து தேரை நிலைக்கு கொண்டு வந்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

