வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தில் நித்தங் கூத்தாடுவார் அய்யனார் கோவிலில் தேரோட்டம்
வேதாரணியம் ஜூன் 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தில் நித்தங் கூத்தாடுவார் அய்யனார் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது . வைகாசி விசாக திருவிழாவின் நிறைவாக திருத்தேரில் நித்தங்கூத்தாடுவார் அய்யனார் எழுந்தருளி வைகாசி விசாகத் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான சுற்றுவட்டார கிராமத்திலுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.இந்த தேரோட்டத்திற்கு வேதாரணியம் உட்கோட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆய்வாளர்
சுப்ரியா மற்றும் ஏராளமான காவல்துறையினர்,
மின்சாரத் துறையினர்
மருத்துவத் துறையினர்,கிராம பஞ்சாயத்தார்
அனைவரும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

