தூத்துக்குடி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!!
அமைச்சர், மேயருக்கு கல்தா கொடுத்த கல்வி அதிகாரி!!
கல்வி அமைச்சரிடம் புகார் தெரிவிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!!
தூத்துக்குடி,
ஜூன்,13.
தூத்துக்குடி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவங்களால், தூத்துக்குடியே திணறிவிட்டது. என்ன நடந்தது?
அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில், கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசு பள்ளிகளில் பயில்வது குறித்தும் அதிக மாணவ, மாணவிகளை சேர்க்கும் விதமாகவும், தூத்துக்குடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஆதவா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் அரசு பள்ளிகளில் மாணவ சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மாநகராட்சி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
எனினும், இந்த விழாவுக்கு அமைச்சர் கீதாஜீவனை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது… அதேபோல, மேயர் ஜெகன் பெரியசாமியையும் கூப்பிடவில்லை என தெரிகிறது.. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் கூடம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, திடீரென அமைச்சர் அந்த பள்ளிக்கு வந்தார்.. அப்போது அங்கு அரசு விழா நடைபெற்றுக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.. உடனே அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘இந்த நிகழ்ச்சிக்கு ஏன் எங்களை கூப்பிடவில்லை? உள்ளூர் சட்டமன்ற உறுப்பினராக நான் இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியாதா? என கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது… அங்கே கலெக்டரை கூட அழைக்கவில்லை.. தூத்துக்குடியில் மட்டும் தான் கலெக்டரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறோம் என்றார்.. இதைக்கேட்டதும், மேயர் ஜெகன் பெரியசாமி, ‘மாநகராட்சி பள்ளியில் முழுமையாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருக்கிறது.. அப்படி இருக்கும்போது, எப்படி இந்த பள்ளியில் நிகழ்ச்சி நடத்தலாம்? பள்ளியில் எதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி? என்று காரசாரமாக அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார்.
இப்படி மேயரும், அமைச்சரும் மாறி மாறி கேள்வி கேட்டதால், அதிகாரிகள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிவிட்டனர்.. இதற்காக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர் என்றாலும், பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் இது சம்பந்தமாக புகார் கொடுப்பதாக அமைச்சர் கீதாஜீவன் சொல்லி விட்டு சென்றாராம்.. பள்ளி விழாவிற்கு அழைக்காத அதிகாரிகளை கீதாஜீவன் கண்டித்ததும், மேயர் கேள்வி எழுப்பியதும், தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு தொகுதியில் அரசு விழாவோ, அல்லது அரசு சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்றன தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேயர் போன்றவர்களுக்கு
அரசு அதிகாரிகள் தகவல் சொல்வது வழக்கம் ஆனால் கல்வித்துறை அதிகாரி மக்கள் பிரதிநிதியை புறக்கணித்த பின்னணி
என்னவோ ? என டீக்கடை பெஞ்ச் வரை இது ஒரு ஹாட் டாபிக் ஆக ஓடுகிறது. இதனால் கல்வித் துறை அமைச்சரிடம் புகார் செய்து தூத்துக்குடி கல்வித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க லோக்கல் அமைச்சர் மற்றும் மேயர் தரப்பு தீவிரமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் பஞ்சாயத்து முடிவுக்கு வரும்

