வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு கிராமத்தில் மகான் காதர் மீரான் சாகிப் தர்காவில் ஜியாரத் பெருவிழா
வேதாரணியம் ஜூன் 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு கிராமத்தில் மகான் காதர் மீரான் சாஹிப் தர்காவில் ஜியாரத் பெருவிழா
11.06.2022 இரவு
மிகச் சிறப்பாக நடைபெற்றது.அப்போது கள்ளிமேடு ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினர் ரவுலா சரீபுக்கு பூசும் சந்தனத்தை அவருடைய வீட்டிலிருந்து தர்காவிற்கு எடுத்து வந்தனர்.இரவு ரவுலா சரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வு 45 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவது ஒரு சிறப்பான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.இந்த விழாவில் ஆறுமுகம்பிள்ளை குடும்பத்தினர் குடும்பத்தினர் சார்பாக ஆ.மணி,மற்றும் ரஹமத்துல்லா, சகாப்தீன்,சோட்டா பாய் ,முகமது ரபிக், இக்பால் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள், இந்துக்கள் கலந்து கொண்டனர்.இதில் ஏராளமான முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்து கொள்வதால் இது ஒரு மத நல்லிணக்க விழாவாகவே கருதப்படுகிறது.விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழா இறுதியில் இன்னிசை கச்சேரி சிறப்பாக நடைபெற்றது.

செய்தி தொகுப்பு எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

