நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று 11.06.2022 நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அருண்தம்புராஜ் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகதலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், ஆகியோர் உடனிருந்தனர்.
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் அமிர்தா நகரில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் பங்கேற்று வீடுவீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் வகையில் குப்பை கூடைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருப்பதர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பையினை பொதுமக்களுக்கு வழங்கினார். மற்றும் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டார். பின்னர் அப்பகுதியில மரக்கன்றுகளை அமைச்சர் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், நகர் மன்ற துணைதலைவர் செந்தில், கல்லூரி மாணவமாணவிகள், அனைத்துதுறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

