வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சிறப்பு தூய்மை பணி சிறப்பான தொடக்கம்
வேதாரணியம் ஜுன் 11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சிறப்பு தூய்மை பணி 11. 6 .2022 வார்டு 12 மற்றும் வார்டு 14 இல் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தெருக்களில் தூய்மை பணிகள் காலை மணி 7 முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.முதலில் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற
நிகழ்வில் நகரங்களின் சிறப்பு தூய்மை பணிக்கான உறுதிமொழி நெகிழியை ஒழிப்போம் நீர் வளம் காப்போம் நெகிழி இல்லா வேதாரணியம் நகராட்சியை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த நிகழ்வில்
நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி,நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் பூங்கொடி அருமைநாதன், ஆணையர் V.ஹேமலதா, நகராட்சி பொறியாளர் கே முகமது இப்ராஹிம்,
அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள்
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வார்டு 12 ல் அடங்கியுள்ள வேதாரண்யம் நகராட்சி அரசு மருத்துவமனை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தோட்டக்கலை அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு நூலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கால்நடை மருத்துவமனை தீயணைப்பு நிலையம் காந்தி பூங்கா மற்றும் பொது கழிவறைகளை சுத்தம் செய்தல்
வார்டு 14 இல் அடங்கியுள்ள ஆறு தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் இடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியவைகளை கொண்டு சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளுதல், மூன்றாம் தெரு அரசு பள்ளியின் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சுத்தம் செய்தல்,
புதுத்தெரு நந்தவன தெரு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுதல்,
திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்குதல்,
நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை வீடுதோறும் ஒட்டுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.



செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

