விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல்நிலைய சரகத்தில் உள்ள C.A.R.M பெண்கள் மேல்நிலை பள்ளியில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பெண்குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று திங்கள்கிழமை நடத்தினார்கள்.
விளாத்திகுளம் C.A.R.M பெண்கள் மேல்நி
லை பள்ளியில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள்நடைபெற்ற கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு, pocso சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, குழந்தை திருமண ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஆகிய விழிப்புணர்வுகளை C.A.R.M பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் சுமார் 300 மாணவியர்களுக்கு அறிவுரையும், விழிப்புணர்வுவும் வழங்கினார்கள்.

இன்று C.A.R.M பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் விளாத்திகுளம் ஆய்வாளர் திரு.ரமேஷ், பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.ஆதிலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சாகாதேவன், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

