திங்கள்கிழமை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல்நிலைய சரக எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நாகலட்சுமி ஆகியோர் தலைமையில் சுமார் 30 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 118 பேர், ஆண்கள் 56 பேர் என சுமார் 174 பேர் கைது செய்யப்பட்டு விளாத்திகுளம் முருகைய்யா நாடார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

