நாகையில் குழந்தை தொழிலாளர் முறை அகற்ற உறுதிமொழி ஏற்பு
நாகை ஜூன் 10
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைதொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன் எனவும் உளமாற நாம் உறுதி கூறுகிறோம் என்ற உறுதிமொழி ஏற்றனர்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ராஜன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

