வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஜூன் 9
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்ட அளவில் இன்றைக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் முருகையன் தலைமை தாங்கினார்
மேலும் வட்ட செயலாளர் மோகன் வட்ட பொருளாளர் வீரகுமார் மாவட்ட பொருளாளர் தங்கராசு மற்றும் ஏராளமான நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டு
கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.
