இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழா – சிறப்பு கடனுதவி முகாம் – சுமார் 4.74 கோடி மதிப்பிலான கடனுதவி நாகை மாவட்ட ஆட்சியர் வழங்கல்
நாகை ஜூன் 9
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கடனுதவி வழங்கும் முகாம் நடந்தது. முகாமில் 112 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 74 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். கீழ்வேளுர் எம்.எல.ஏ நாகை மாலி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டலமேலாளர் ஸ்ரீராம் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் டாக்டா் அருண்தம்புராஜ் தெரிவித்தாவது:
வங்கியாளர்கள் சுய உதவி குழுக்களுக்கு, தனிநபர் தொழில் செய்வதற்க்கும் அதிக அளவில் கடன் வழங்க வேண்டுமென்றும், மாவட்ட தொழில் மையம், தட்கோ மூலம் தொழில் செய்ய வரும் நபர்களுக்கு வங்கியாளர்கள் முக்கியதுவம் கொடுத்து கடன்களை விரைத்து வழங்க வேண்டுமென்றும், நபார்டு வங்கி மூலம் விவசாயம், மீன்வளம் போன்ற பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றது. மேலும் தொழில் முனைவோர்களை கண்டறிந்து வங்கிகள் கடன் கொடுத்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும் வங்கிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் வாடிக்கையாளர்கள் செயல்பட வேண்டும் எனவும், வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன்களை உரிய கால தவணை செலுத்தி நன்மதிப்பை பெற்று மீண்டும் அதிகப்படியான கடன் பெறும் வகையில் செயல்படவேண்டும் என தெரிவித்தார்.
இந்த முகாமில் மகளிர் சுய உதவி குழு கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், விவசாய கடன்களையும், தட்கோ கடன், மாவட்ட தொழில் மையம் மூலமான கடன் மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் நரிமணம் துறையூர் கிராமங்களில் காளான் வளர்ப்பு பயிற்சி பெற்ற 70 பயனாளிகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் மற்றும் வங்கி முகவர்கள் ஆகிய 22 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்;

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி மேலாளர் செந்தில்குமார், நபார்டு மாவட்ட மேலாளர் விஸ்வாந்கண்ணா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், வங்கி மேலாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

