வேதாரண்யத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் உலக ஆழ்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரணியத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம் ஜூன் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் உலக ஆழ்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரணியம் பேருந்து நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை வேதாரணியம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்K. முருகவேல் மற்றும் வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழுமம் துணை கண்காணிப்பாளர் D.சுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்தப் பேரணி வேதாரணியம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து ராஜாஜி பூங்காவை வந்தடைந்தது. இதில் வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் செல்வராசு வேதாரணியம் கடற்கரை காவல் நிலைய எஸ்எஸ்ஐ பன்னீர்செல்வம் மற்றும் கடலோர காவல் துறையினர் ஊர்க்காவல் படையினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

