வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
வேதாரணியம் ஜூன் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் தனித்துறை 31 சதவீத அகவிலைப்படி புதிய விற்பனை முனையம் மோடம் வழங்குதல் ஓய்வூதியம்
சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 8.6 .2022 கோட்ட அளவில் வேலைநிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் P.K. சிவகுமார்
முன்னின்று நடத்த மாவட்டத் தலைவர் எஸ் பாஸ்கர் மாவட்ட துணைத்தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமான நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.இறுதியில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி தொகுப்பு எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

