நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சிகே.எஸ்.மஸ்தான் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழாநடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜூன் 7
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது
இக்கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வி.ஷகிலா, தமிழக மீன் வளர்ச்சிகழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் ஆகியவை மூலம் சிறுபான்மையினர் மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


கிறிஸ்துவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் சீரமைப்பு பணிக்கும் அரசு நிதியுதவி வழங்கிவருகிறது. மக்களுக்காக உதவித்தொகைகள் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உலமாக்கள் நலவாரிய உறுப்பினர்கள் 10,518 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், மக்களுக்காக ரூ.25,000 மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. ஹஜ் பயணம், ஜெருசலேம் பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மை பிரிவைச் சார்ந்த சிறு, குறு வியாபாரிகளின் மேம்பாட்டிற்காக கடனுதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது கடன் வழங்குவதற்கான ஆண்டு வருமானம் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடன் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழக மக்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. அனைத்துத் திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடைய முழு மூச்சுடன் இந்த அரசு செயல்பட்டுவருகிறது என மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் 91 மக்களுக்காக நலவாரிய அட்டையிணையும், ரூ9,784 மதிப்புள்ள 02 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைபெட்டி இணையும், ரூ25,000 மதிப்புள்ள 05 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரமும, டாம்கோ கடன் உதவித் தொகையாக ரூ 2,42,500 மதிப்பீட்டில் 43 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ 4,75,000 இலட்சம் மதிப்பீட்டில் 01 பயனாளிக்கு மீன் விற்பனை செய்ய கடன் உதவித்தொகையும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை சார்பில் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு ரூ1.5 இலட்சம் மதிப்பீட்டிலான வைப்புதொகைக்கான பத்திரத்தையும், வேளாண்மைதுறை சார்பில் ரூ5,021 மதிப்பீட்டில் 05 நபர்களுக்கு இடு பொருட்களான உயிர் உரம் மின்கல தெளிப்பான் நுண்ணூட்டகலவை மற்றும் மினிட் போன்ற நலத்திட்ட உதவிகளை என மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தர்காவில் பணிபுரியும் 120 பணியாளர்களுக்கு அரிசி காய்கறி மளிகைப் பொருட்களை வழங்கினார் அதனை தொடர்ந்து நாகூர் தர்காவை புனரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நாகை நகராட்சியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நகராட்சி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்தார், பின்னர் நகர் மன்றதலைவர் உறுப்பினர்களிடம் நகராட்சி வளர்ச்சிபணிகள் குறித்தும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற துணைதலைவர் செந்தில்குமார், நாகூர் தர்கா மேனேஜீங் டிரஸ்டி செய்யதுகாமில் சாஹிப், தர்கா ஆலோசனை குழு தலைவர் முகமதுகலீபாசாஹிப், தமிழ்நாடு சிறுபான்மை குழு உறுப்பினர் தமீம் அன்சாரி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.தனபால் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.
செய்தித் தொகுப்பு
டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

