தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தார் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து கைது – சுமார் 2,28,000 மதிப்பிலான 7 சவரன் தங்க நகைகள் மீட்பு – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.
கயத்தார் பகுதியில் தனியாக சென்று கொண்டிருந்த சாலைபுதூர் தெற்கு தெருவை சேர்ந்த உத்தண்டராஜ் மனைவி செல்வராதிகா ஸ்ரீ (23) என்பவரிடம் கடந்த பிப்ரவரி 03ம்தேதி அன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்வராதிகாஸ்ரீ கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வராதிகாஸ்ரீ அளித்த புகாரின் பேரில் கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அரிக்கண்ணன், நாராயணசாமி, தலைமை காவலர் முருகன், காவலர்கள் பாலகிருஷ்ணன், பாலமுருகன், சத்ரியன், குருமூர்த்தி, கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை தனிப்டையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மகன் முருகபெருமாள் (எ) விக்கி (23), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் சபரிமணி (21) மற்றும் அச்சங்குளம் தீத்தாம்பட்டியை சேர்ந்த மூக்கையா மகன் சிவசுப்பிரமணியன் (26) ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 2,28,000/- மதிப்பிலான 7 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.
எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகளை கைப்பற்றிய தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.

