திமுக உட்கட்சி தேர்தல்
தூத்துக்குடி ஒன்றியம் கிழக்கு பகுதி செயலாளர் பதவிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தேர்தல் அதிகாரியிடம் விருப்பமனு அளித்தார்.
—-
தூத்துக்குடி, ஜூன்,7
தூத்துக்குடி திராவிட முன்னேற்றக்கழகம் 15 வது உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி தெற்கு மாவட்ட திமுக தேர்தல் அதிகாரியாக மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் குழந்தைவேல் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஆகியோர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின்படி மாவட்ட கழக அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கி விருப்பமனுவை பெற்றக்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி ஒன்றியம் கிழக்கு பகுதி செயலாளர் பதவிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆசியோடு தேர்தல் அதிகாரிகளான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் ஆகியோரிடம் விருப்பமனுவை அளித்தார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், கிளைச்செயலாளர் மாரியப்பன், கௌதம், உள்பட பலர் உடனிருந்தனர்.

