நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று முன்களப் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா அவர்கள் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார் இதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் துணை போலீஸ் சூப்பிரண்டு காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள், ஊர்க்காவல் படையினர், மாவட்டக் காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் என 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்


